நீரளவே ஆகுமாம் நீராம்பல் !
---------------------------------------------------------------------------------------
தமிழ்
மூதாட்டி ஔவையார் அருளிச் செய்த நூல்களுள் ”மூதுரை”யும் ஒன்று. முப்பது வெண்பாக்களைக் கொண்ட
இந்நூலுக்கு “வாக்குண்டாம்”
என்று இன்னொரு பெயரும் உண்டு. அதிலிருந்து
உங்களுக்காக ஒரு பாடல் !
---------------------------------------------------------------------------------------
பாடல் (07)
--------------------------------------------------------------------------------------
நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுமாம் குணம் !
--------------------------------------------------------------------------------------
சந்தி
பிரித்து எழுதிய பாடல்
--------------------------------------------------------------------------------------
நீர்
அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல்
அளவே ஆகுமாம் நுண் அறிவு; –
மேலைத்
தவத்து
அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்;
குலத்து
அளவே ஆகுமாம் குணம்.
---------------------------------------------------------------------------------------
அருஞ்சொற்பொருள்:
------------------------------------
நீராம்பல்
= குளத்து நீரில்
வளரும் அல்லியானது ; நீர் அளவே ஆகுமாம் = நீரினது உயரத்தின் அளவாகவே இருக்கும் ; (அதுபோல)
நுண்ணறிவு = கூரிய அறிவானது ; தான் கற்ற = தான் படித்த ; நூல்
அளவே ஆகும் = நூல்களின் தன்மை அளவாகவே இருக்கும் ; தான் பெற்ற செல்வம் = தான் அடைந்திருக்கும்
பொருட் செல்வம் ; மேலை
= மேன்மை தரும் ;
தவத்து அளவே ஆகுமாம் = செல்வத்தின் மீதான
பற்றின் அளவே ஆகும் ; குணம் = குணவியல்புகள்
; குலத்து அளவே ஆகும் = (தான் பிறந்த)
குடியின் அளவாகவே இருக்கும்.
‘---------------------------------------------------------------------------------------
பொருளுரை:
-------------------------
எத்துணை நீளமாகத் தண்டு
இருந்தாலும், குளத்தில் படர்ந்திருக்கும் அல்லியானது நீரின்
உயரத்திற்கு மட்டுமே உயரமுடியும் !
ஒரு மனிதன் எத்தகைய நூல்களைக் கற்கிறான் என்பதை வைத்தே
அவனது அறிவு வளர்ச்சியின் தன்மையும் அமையும் !
செய்யும் செயல்களின் மேன்மையைப் பொறுத்தே வாழ்க்கைக்குத் தேவையான செல்வம் ஒருவனிடம்
வந்து சேரும் !
பிறந்த குடியில் தொன்றுதொட்டு நிலவிவரும் ஒழுக்கவியல்புகளுக்குத் தக்கவாறே ஒரு மனிதனின்
குணமும் அமையும் !
---------------------------------------------------------------------------------------
கருத்துச்
சுருக்கம்:
நீரின்
உயரம் வரை நீராம்பல் உயரும்;
கற்கும் நூல்களைப் பொறுத்து அறிவு வளரும்; செல்வத்தின்
மீது பற்று வைத்தால் செல்வம் சேரும்; குடிப்பிறப்பை பொறுத்தே
குணம் அமையும் !
----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(veda70.vv@gmail.com)
ஆட்சியர்,
மூதுரை
வலைப்பூ.
[தி.ஆ: 2052 : சிலை (மார்கழி) 05)
{22-12-2021}
----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக